இந்து ஒற்றுமை - சில எண்ணங்கள்
இந்தியாவின் பாரம்பரியமிக்க ஒரு இந்து ஸ்தாபனத்திற்கு எதிரான நடவடிக்கைக்கு இந்துக்களிடையே அதிக எதிர்ப்பு இல்லாததற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன. அதுவும், நீதிமன்றத்தில் அரசு வக்கீல் மிகச் சாதாரணமாக ஒரு மடாதிபதியை 'undeserving criminal' என்றழைப்பதும், அவர் போலீஸ் காவலுக்கு அனுப்பப்படுவதும், சலுகைகள் மறுக்கப்பட்டு ஒரு சாதாரண குற்றவாளியைப் போல் அவர் நடத்தப்படுவதும், அவற்றுக்கு எந்த எதிர்குரலும் கேட்காததும், யாருமே எதிர்பார்க்காதது தான்!
இதற்கான பல காரணங்களில் முக்கியமானது, சங்கர மடத்தை, குறுகிய நோக்குடைய, ஒரு பார்ப்பனீயத்தின் சின்னமாகவே பலர் பார்க்கிறார்கள். இதில் உண்மையும் இருக்கிறது. இத்தனைக்கும் ஜெயேந்திரர், மற்ற மடாதிபதிகள் போல் அல்லாமல், சமூக மற்றும் மக்கள் நலத் திட்டங்களை சங்கர மடம் மூலம் செயல்படுத்தவும், தலித்துக்களுக்கு ஆதரவாக பேசவும், நடக்கவும் ஓரளவு முயன்றார் எனக் கூறலாம். இருப்பினும், இந்துக்களில் அனைத்து சாராரையும் சரிசமமாகக் கருதி, அவர்களை ஒன்றிணைத்து, இந்து மதத்தை வலுப்படுத்த மடமும், அதன் மடாதிபதிகளும் தவறி விட்டதன் விளைவே, ஜெயேந்திரர் கைதுக்குப் பின் இந்துக்களிடையே நிலவும் ஓர் ஆழ்ந்த மௌனமும், அனுதாபமின்மையும்.
இந்துக்களுக்கு எதிரானவர்கள், தமிழ்நாட்டில் இந்துக்களிடையே ஒற்றுமை குறைவு என்பதைத் மிகத் தெளிவாக புரிந்து வைத்திருக்கிறார்கள்! இந்துக்களிடையே பிராந்தியம், மொழி, இனம், குலம் என்ற வகையில் பல வேறுபாடுகள் பல காலமாகவே (வளர்க்கப்பட்டும்!) நிலவியும் வருகிறது. இதில், மதச்சார்பற்ற (என்று கூறிக்கொள்ளும்!) அரசியல் கட்சிகள் குளிர் காய்கின்றன. இந்துக்கள் பொதுவாக ஒற்றுமையாக இருந்து செயல்படுவது, வினாயகர் ஊர்வலங்களிலும், கோயில் குடமுழுக்கு விழாக்களிலும் தான்! தங்களுடைய தனிப்பட்ட வாழ்வில் இயல்பாக இந்துவாக இருக்கும் பலர், வெளியே தங்களை மதச்சார்பற்றவராகக் காட்டிக் கொள்வதில் அதிக ஆர்வமாக உள்ளது ஏன் என்பது விளங்கவில்லை!
இந்துக்களின் கட்சி என்றுணரப்படும் பிஜேபி-யில் கூட, கட்சியின் முக்கிய பொறுப்புகளை வகிப்பவர்களில், பார்ப்பனர் அல்லாத இந்துக்களும், தலித்துக்களும் மிகக் குறைவே. இந்நிலை மாறி, அவர்களுக்கும் உரிய வாய்ப்பு வழங்கப்படுவது தான், இந்துக்களிடையே ஒற்றுமை தழைக்க வழி வகுக்கும். இக்கால கட்டத்தில், நம் நாட்டிற்கு மிக அவசியமானதும் கூட!!!
7 மறுமொழிகள்:
பாலா,
இந்த 'இந்து' 'இந்து'ங்கிறோமே அதுக்கு என்ன விளக்கம்? (பார்சி மொழியில் என்னமோ அர்த்தம் எழுதிவெச்சிருக்கானாமே, அதுமாறி விதண்டாவாதம் பேச நான் வரலை) நானும் ஒரு இந்துங்கிற உரிமையில் சொல்றேன்.
சாஃப்ட்வேர் உலகத்தில் ஓப்பன் சோர்ஸ் கேள்விப்படுறகிறோமே, அப்படி ஓப்பன் சோர்ஸ் மூவ்மெண்ட் வழியா கிடைக்கிற எல்லாத்தையும் ஸ்வாஹா பண்ணி opensource Software, Inc. அப்படின்னு ஒரு கம்பெனி வெச்சா அப்படி இருக்கும்? அதன் அடிப்படையே ஆட்டம் காணாதா? ஒப்பன் சோர்ஸ் மாதிரித்தான் நம்ப இந்துமதம். ஓப்பன் சோர்ஸில் அவ்வப்போது பலரும் தங்களால் முடிஞ்சதை பங்களிப்பதுபோலத்தான் நம் ஞானிகளும் சிந்தனாவாதிகளும் சொன்னதெல்லாம். அவையனைத்துமே மறுபார்வைக்கும் மேம்படுத்தலுக்கும் உரியவை, மேம்பட்டுக்கொண்டே இருக்கின்றன. ஆதிசங்கரரிலிருந்து, ராமானுஜரிலிருந்து, பாரதி, ரமணர், அரவிந்தர், ஓஷோ எல்லாருமே புதுப்புது விஷயங்களை பல பார்வையில் பார்த்து சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். இன்னொருபுறம் ஐயனாரிலிருந்து, கருப்பராயனிலிருந்து குறத்தி மணவாளனிலிருந்து சமூகங்கள் தங்கள் தெய்வீகத்தை குறித்துக்கொள்ள சின்னங்களையும் வழிபாட்டுமுறைகளையும் கடைப்பிடித்துகொண்டுவருகின்றன. இதையெல்லாம் விடுத்து மெக்ரோசாஃப்ட் விண்டோஸ் மேக்-ஓஎஸ் மாதிரியான மதங்களான கிறிஸ்தவம்/இஸ்லாம் கூட இந்துமதத்தை வைத்துப் பார்க்கமுடியாது. அவற்றுக்கெல்லாம் உரிமையும் கடமையும் உள்ள நிறுவனங்கள் இருக்கிறமாதிரி அம்மத அமைப்புகள். அவற்றின் மேல் கை வைத்தால் எதிர்வினை அதிகமாகத்தான் இருக்கும். ஆனால் தனக்கு முழு உரிமையும் கடமையும் இல்லாதது தெரியாமல் opensource Software, Inc. தலைவர் தானும் அதே அளவுக்கு எதிர்பார்க்கமுடியாது. opensource Software-ன் தேவையறிந்து அதன் முக்கியத்துவத்தைப் பரப்புவது, மேம்படுத்துவது என்பதுதான் அந்த இயக்கத்தின் குறிக்கோளாக இருக்கணும். அதைவிட்டுவிட்டு 'உலகின் சாஃப்ட்வேரெல்லாம் என்றோ எழுதப்பட்டுவிட்டது, அது உனக்குப் புரியாது நான் சொல்லித்தர்ரேன்'னு பேசினால்? இப்படித்தான் ஆகும்.
இது பாமரனுக்குக்கூடத் தெரியாமல் புரியாமல் இருக்கலாம் (ஆனால், அவன் புரிந்துவைத்திருக்கிறான் என்பதுதான் ஆச்சரியம்!) தான் இவர்களுக்கெல்லாம் தலைவர் என்று நினைத்துகொண்டிருக்கும் சாமிகளுக்குப் புரியவில்லை என்றால் பரிதாபமாக இருக்கிறது. அவ்வளவுதான்.
'அவரவர் தமதம தறிவறி வகைவகை..' நம்மாழ்வார் பாசுரம் படித்திருக்கிறீர்களல்லவா?
மற்றபடி இந்த வழக்கின் நியாய அநியாயங்கள் பற்றியெல்லாம் எனக்கு எந்தக் கருத்தும் இல்லை. அதையெல்லாம் கோர்ட் பார்த்துக்கொள்ளும். எப்படியும் இன்னொரு விஷயம் மீடியாக்களுக்குக் கிடைக்கும்வரைதான் இந்த அவல். இதனாலெல்லாம் இந்துக்கள் துவண்டுபோய்விடமாட்டார்கள் (இந்துத்வா துவண்டு போகலாம், அல்லது இன்னொரு ரவுண்டு ஆடலாம்).
பாலாஜி,
நல்ல பதிவு.
காசி,
இந்த விஷயத்தில் ஸ்வாமிகளுக்காக இன்னமும் பரிதாபப்படும் இரண்டு நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன். அவர்கள் " கோர்ட்டாவது..மண்ணாவது. அவர் எப்படியும் வெளியே வந்து விடுவார். சாதாரண ஆளா ..?? " என்கிறார்கள். இதற்கென்ன சொல்ல..??
Bala
Ungal aathangam purihirathu unmaiyum kooda. Aanaal ithu ippadi thaan irukkum, yaarum ethuvum seithuvida mudiyaathu. Maatri vida mudiyaathu. Azhivuthaan thalai vidhi enral azhindhuthaan pogum. Appadithaan vidhikkappatirukkirathu polum.
Naam varutham mattume padalam.
Anbudan
S.Thirumalai
இந்தியாவின் பாரம்பரியமிக்க ஒரு இந்து ஸ்தாபனத்திற்கு எதிரான நடவடிக்கைக்கு இந்துக்களிடையே அதிக எதிர்ப்பு இல்லாததற்கு இதன்மூலம், நீங்களும் உங்களைப்போல சிலரும் என்ன சொல்லவருகிறீர்கள் பாலா?
இந்த செயல்மூலம் ஊர் உலகில் இரத்த ஆறு ஓடவேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்களா? சிறுபான்மை என்று சொல்லப்படும், மற்ற இனத்தலைவர்களை கேலிசெய்யும்/கைதுசெய்யும் துணிச்சல் உண்டா என்று இன்று பலரும் கேட்பது எதற்கு?
ஒருவேளை அதுபோன்ற கடந்தகால நடவடிக்கைகளால், அதன்பின்விளைவுகள் கொடூரமாக இருந்ததுபோல் - நாமும் செய்யவேண்டும். "கைக்கு கை, காலுக்கு கால்" என்றெல்லாம் யோசிக்கவேண்டுமா?
எனக்கு தெரிந்து, எனதுவாழ்க்கையில் இந்த இந்து, முஸ்லீம், கிருஷ்தவ மத பிரிவினைகள், போராட்டங்கள், கொலைகள், கலவரங்கள், சண்டைகள் போன்றவையெல்லாம் தமிழ்நாட்டில் அதிகமானது - இந்து முண்ணனி, பாஜக, ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள் தமிழகத்தில் தலையெடுத்தபிறகுதான். அவர்கள் தலையெடுத்ததற்கு காரணம், திராவிட இயக்கங்களின் பிராமண எதிர்ப்பு நடவடிக்கைக்களின் எதிர்வினைதான்.
அதனால், என்னைப்பொருத்தவரை மதம் என்பது புனிதம்,கடவுள் சம்பந்தப்பட்டதாக இருந்தவரை சரி. இப்போது எல்லா மதத்திலும், தீவிரவாதம், அரசியல் புகுந்துவிட்டது. அதற்கு ஆதரவளித்து, முன்நடத்தி செல்ல ஆரம்பித்த்பின் அனைவரும் அரசியல்வாதிகள்தான், சாதராண மக்கள்தான்...
காசி,
இந்துமதத்தை மிக அழகாக OPENSOURCE software உடன் ஒப்பிட்டுள்ளீர்கள். உங்கள் கருத்துக்கள் படிக்க சுவாரசியமாகவே இருந்தது :-) அதே சமயத்தில், அவை பலமான நேர்மையும், உண்மையும் கூடிய கருத்துக்களும் தான். உங்களது முந்தைய 'STRONG' பின்னூட்டம் ஒன்றுக்கு நான் இட்ட பதிலை படித்து, என் தரப்பு நியாயத்தை அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன் :-))
அன்பு,
நல்ல கருத்துக்களை முன் வைத்துள்ளீர்கள். "இரத்த ஆறு ஓடவேண்டும்", "கைக்கு கை, காலுக்கு கால்" என்பதல்ல நான் சொல்ல வந்தது. Hindu unity must gain momentum என்பதே என் விருப்பம். அதற்கான சூழல் உருவாக இந்துக்கள் அனைவரும் முனைய வேண்டும், செயல்பட வேண்டும்.
சுந்தருக்கும், திருமலைக்கும் நன்றி!
என்றென்றும் அன்புடன்
பாலா
இந்து மதம் என்பதே பார்ப்பன மதம்தான்.இல்லை இந்து மதமென்பது ஒரு தத்துவம் என கொண்டால் அதன் வரையறை என்ன அதை பின்பற்றுகிற மக்களின் பழக்கவழக்கங்கள் என்ன?உணவுப் பழக்க வழக்கங்கள் என்ன?ஜெயேந்திரன் ஏன் பன்றிக்கறி சாப்பிடுவதில்லை?*** EDITED *** ஜெயேந்திரன் கொலை செய்ய மாட்டான் என்பதற்கு என்ன உத்திரவாதம்.பார்ப்பன பனியா கும்பல்களின் வளர்ச்சிக்கு பின்னரே ஜேயேந்திரன் ஆட்ட்ம ஆரம்பித்தது.
மற்றபடி திராவிடக் கட்சிகளின் வளர்ச்சிக்கு பின்னர்தான் ஜேயேந்திரன் வளர்ந்தான் என்பதெல்லாம் வரலாற்றை புரிந்து கொள்ளத்தவ்றுகிற போக்கு.
Posted by Anonymous to தமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா at 12:45 PM, August 09, 2007
Post a Comment